மேலும் செய்திகள்
கடந்த வார விலையை விட இளநீர் விலை ரூ.2 உயர்வு
10-Mar-2025
பேரையூர்: கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் இளநீர் விலை அதிகரித்துள்ளது.பேரையூர் பகுதிகளில் தென்னை விவசாயம் அதிகளவில் நடக்கிறது. போதிய மழை இருந்தும் தென்னை மரங்களில் எதிர்பார்த்த இளநீர் வரத்து இல்லை.இதனால் இளநீர் சாகுபடி குறைந்தது. இளநீர் தேவைக்கு பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை பகுதிகளை நம்பி இருக்க வேண்டிய நிலை உள்ளது. வரத்து குறைவால் கடந்த மாதம் ரூ.30 வரை விற்ற ஒரு இளநீர், தற்போது 50 ரூபாயாக உயர்ந்துள்ளது.வியாபாரிகள் கூறியதாவது: வெளி மாவட்டங்களுக்கு சென்று இளநீர் கொள்முதல் செய்கிறோம். போக்குவரத்து செலவு, கோடைகால தேவை அதிகரிப்பு காரணங்களால் இளநீர் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் உள்ளது என்றனர்.
10-Mar-2025