உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அக்கினியை (மி)விரட்டிய மழை

அக்கினியை (மி)விரட்டிய மழை

மதுரை: மதுரை நகரில் நேற்று மதியம் வரை சுட்டெரித்த அக்கினி வெயிலை திடீரென மேகம் மூடிய நிலையில் மதியம் 2:30 மணி முதல் ஒரு மணி நேரம் இடைவிடாத பெருமழையாய் கொட்டியது. சுழன்றடித்த காற்றையும் கலங்கடித்த மழையால் ரோடுகள் வெள்ளக்காடாகின. தொடர்ந்து மழை பெய்வதால் இரவுநேர வெப்பம் தணிந்து பூமி குளிர்ந்தது.நேற்று முன்தினம் சராசரியாக 17.91 மி.மீ., மழை பதிவானது. உசிலம்பட்டி 64, மேட்டுப்பட்டி 48.60, கள்ளந்திரி 48, புலிப்பட்டி 40.80, குப்பணம்பட்டி 33, பெரியபட்டி 30.20, திருமங்கலம் 23.40, கள்ளிக்குடி 19.4, சிட்டம்பட்டி 18.4, மதுரை வடக்கு 15.20, தல்லாகுளம் 14.60, மேலுார் 14, ஏர்போர்ட் 10, சாத்தையாறு அணை 5.80, விரகனுார் 2, எழுமலை 0.40 மி.மீ. மழை பதிவானது.முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 114.95 அடி (மொத்த உயரம் 152 அடி) நீர் இருப்பு 1719 மில்லியன் கனஅடி, நீர்வரத்து, வெளியேற்றம் வினாடிக்கு தலா 100 கனஅடி. வைகை அணை நீர்மட்டம் 56.41 அடி(மொத்த உயரம் 71 அடி) நீர்இருப்பு 2786 மில்லியன் கனஅடி, நீர்வரத்து வினாடிக்கு 68, வெளியேற்றம் 3072 கனஅடி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை