மேலும் செய்திகள்
அக்.11, 12ல் தீத்தடுப்பு விழிப்புணர்வு
20 hour(s) ago
மதுரையில் போலீஸ் விசாரணையில் தப்பி ஓடிய இளைஞர் பலி
21 hour(s) ago
மதுரை: ''மதுரை அரசு மருத்துவமனையில் தைராய்டு பிரச்னையால் பாதிக்கப்படுவோர் அதிகளவில் கண்டறியப்படுவதாக'' டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.ஒழுங்கற்ற மாதவிடாய், படிப்பில் கவனமின்மை, மனச்சோர்வு இருந்தால் தைராய்டு நோய் பாதிப்பாக இருக்கலாம். ஹைப்போ தைராய்டிசம் என்பது தைராய்டு குறைவாக சுரப்பது. பத்தில் ஒன்பது பெண்கள் (ஹைப்போ தைராய்டிசம்) சுரப்பு குறைவால் பாதிக்கப்பட்டிருப்பர். ஹைப்போ தைராய்டிசம், ஹைப்பர் தைராய்டு என்பது அதிகமாக சுரப்பது. இது ஆண், பெண்களை சமமாக பாதிக்கும் நோய். ஈஸ்ட்ரோஜன், ஹார்மோன் சுரப்பு பிரச்னைதான் காரணம்.நுாறில் 15 பேருக்கு இப்பிரச்னை வரும். பிறந்த குழந்தைகளுக்கு ஆயிரத்தில் ஒருவருக்கு வரும். இதனை உடனே கண்காணித்து சிகிச்சை அளித்தால் அக்குழந்தை இயல்பாக வளரும். பிறந்த 3 மாதத்திற்குள் இந்நோயை கண்டறிந்து மாத்திரையைத் தொடங்க வேண்டும். அதன்பிறகு கண்டறிந்து மாத்திரை கொடுத்தாலும் குழந்தை இயல்பான நிலையில் வளராது.இதுகுறித்து மதுரை அரசு மருத்துவமனை அகச்சுரப்பியல் துறைத் தலைவர் ஸ்ரீதர் கூறியதாவது:வளரும் போது பள்ளிகளில் சக மாணவிகளை விட உயரம் குறைவாக இருந்தால் கண்டறிய வேண்டும். பள்ளிகளில் பாடம் மனதில் பதியாது. வயதுக்கு வந்த பின் மாதவிடாய் பிரச்னை வரும். சுகாதாரக் குழுவினர் இத்தகையோரை கண்டறிந்து ரத்தப்பரிசோதனைக்கு அனுப்புவர். வளரிளம் பிள்ளைகள், கர்ப்பிணிகள், மகளிர், ஆண்கள் என மாதம் 2000 பேருக்கு மதுரை அரசு மருத்துவமனையில் தைராய்டு ரத்தப்பரிசோதனை செய்யப்படுகிறது. இதில் 10 முதல் 20 சதவீதம் பேருக்கு பாதிப்பு உள்ளது.திருமணத்திற்கு முன் மாதவிடாய் வராமல் இருந்தாலும், திருமணத்திற்கு பின் குழந்தை பேறின்மை ஏற்பட்டாலும் தைராய்டு பரிசோதனை செய்வது அவசியம். ஒரு சிலருக்கு கழுத்து வீக்கம் காணப்படும். தைராய்டு குறைவு பொதுவாக 20 முதல் 40 வயதில் பெண்களுக்கு குறைவாக சுரக்கும்.கர்ப்ப காலத்தில் தைராய்டு குறைந்திருந்தால் குழந்தைக்கு கழுத்தில் கழலை பாதிப்பு ஏற்படலாம். திருமணத்திற்கு முன்பாக இந்நோயை கண்டறிந்து தொடர்ந்து மாத்திரை சாப்பிட்டால் மாதவிடாய் பிரச்னை சீராகும். தைராய்டு நோயால் ஏற்படும் குழந்தைப் பேறின்மையை சரிசெய்யலாம். சோம்பலாக இருப்போர் சுறுசுறுப்பாகி விடுவர். முகம், கை, கால் வீக்கம் சரியாகி விடும். சிலருக்கு குறட்டை தன்மையும் மாறி விடும். இவ்வாறு டாக்டர் ஸ்ரீதர் கூறினார்.
20 hour(s) ago
21 hour(s) ago