உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / விவசாயிகளுக்கு பயிற்சி

விவசாயிகளுக்கு பயிற்சி

மதுரை: அலங்காநல்லுார் அட்மா திட்டத்தின் கீழ் தனிச்சியம் செம்புகுடிபட்டியில் விதைப்பண்ணை உயிர்மச்சான்றளிப்பு நடைமுறை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.வேளாண் துணை இயக்குநர் அமுதன், 'மத்திய அரசின் வேளாண் திட்டங்கள், விதைப்பண்ணை மூலம் லாபம் ஈட்டும் வழி' குறித்து விளக்கினார். உயிர்மச்சான்று பெறும் நடைமுறைகள் குறித்து துணை இயக்குநர் மேரி ஐரின் ஆக்னிட்டா, விதைப்பண்ணை அமைப்பது குறித்து உதவி இயக்குநர் சிங்காரலீனா, நெல்லுக்கு உயிர் உரங்கள், நுண்ணுாட்ட சத்துகள் அளிப்பது குறித்து உதவி இயக்குநர் பாண்டி பேசினர். உதவி அலுவலர் பால்பாண்டி, தொழில்நுட்ப மேலாளர் வேல்முருகன் ஏற்பாடுகளை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை