உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஊராட்சித் தலைவர் உட்பட இருவர் கைது

ஊராட்சித் தலைவர் உட்பட இருவர் கைது

மேலுார் : பல்லவராயன் பட்டி வழக்கறிஞர் விஜய பாரதி 33, இவர் நிர்வாகியாக உள்ள உலகநாத சுவாமி மடத்தில் பூஞ்சுத்தி ஊராட்சி தலைவர் ராமநாதன் கடையை வாடகைக்கு எடுத்திருந்தார்.முறையாக வாடகை தராததால் கடையை காலி செய்யக்கோரி விஜயபாரதி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் நேற்று முன்தினம் ராமநாதன் கடையை திறக்க முயற்சித்தார். விஜயபாரதி எதிர்ப்பு தெரிவித்தால் தகராறு ஏற்பட்டது. இது குறித்துபோலீசில் புகார் கொடுக்க சென்ற விஜயபாரதியை ஊராட்சி தலைவர் உள்ளிட்ட 10 பேர் கம்பு மற்றும் கம்பியால் தாக்கினர். இவ் வழக்கில் மேலுார் போலீசார் பூஞ்சுத்தி ஊராட்சி தலைவர் ராமநாதன் 47, மற்றும் நண்பர் முருகன் 35, உள்ளிட்ட இருவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை