மேலும் செய்திகள்
போலீஸ் ஸ்டேஷனுக்கு முதல்வர் விருது
07-Aug-2024
உசிலம்பட்டி: உசிலம்பட்டியில் அ.தி.மு.க., உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.எதிர்க்கட்சி துணைத்தலைவர் உதயகுமார் பேசியதாவது: நடிகர் ரஜினி சத்தமில்லாமல் தி.மு.க., வில் ஒரு நெருப்பை பற்ற வைத்துள்ளார். சீனியர் ஜூனியர் என்ற பகை உணர்ச்சியை. நகைச்சுவையை பகைச்சுவையாக மாற்ற வேண்டாம் என அவர்கள் அடுக்கு மொழியில் பேசினாலும் பற்ற வைத்த நெருப்பு இன்று எரிமலையாக புகைந்து கொண்டிருக்கிறது. அதை அணைக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். பற்ற வைத்த காட்டுத்தீயை எளிதாக அணைத்து விட முடியாது. அது தி.மு.க.,வினரின் மனதில் அனலாக எரிந்து கொண்டிருக்கிறது. எது எப்போது வெடிக்குமோ அது ஆண்டவனுக்கு தான் தெரியும். ஏற்கனவே ஜப்பான், சிங்கப்பூர், துபாய்க்கு சென்ற முதல்வர் ஸ்டாலின் எந்த நிதியும் பெற்றதாக தெரியவில்லை என்றார்.
07-Aug-2024