உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சர்வர் பிரச்னையால் வரி செலுத்த முடியாமல் தவிப்பு

சர்வர் பிரச்னையால் வரி செலுத்த முடியாமல் தவிப்பு

பேரையூர் : மதுரை மாவட்ட ஊராட்சிகளில் 'சர்வர்' பிரச்னையால் வரி உள்பட ஊராட்சி கட்டணங்களை செலுத்த முடியாமல், பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் அவலம் நீடிக்கிறது.தமிழகம் முழுவதும் ஊராட்சிகளில் வீட்டு வரி, தொழில் வரி, உரிமை கட்டணம், குடிநீர் கட்டணம், சொத்து வரி, பெயர் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ள அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை 'ஆன்லைன்' வாயிலாக செலுத்தலாம் என்ற திட்டம் கடந்தாண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்த பின்னர், ஒரு சில மாதங்கள் மட்டுமே ஆன்லைன் வாயிலாக பொதுமக்கள் கட்டணம் செலுத்த முடிந்தது. தற்போது, தொடர்ந்தும், விட்டு விட்டும் நிலவி வரும் 'சர்வர்' பிரச்னையால் வரி உள்ளிட்டவற்றை செலுத்த ஊராட்சி அலுவலகத்துக்கு வருவோர் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.ஊராட்சி செயலர்கள் கூறியதாவது: ஊராட்சிகளில் 'ஆன்லைன்' வாயிலாக மட்டுமே பணம் செலுத்த வேண்டும். பொதுமக்களிடம் நேரடியாக பணம் பெறக்கூடாது. செலுத்திய பணத்துக்கு ஆன்லைன் வாயிலாக மட்டுமே ரசீது வழங்கப்படும்.இரண்டு மாதங்களாக சர்வர் பிரச்னையால் வரி செலுத்த முடியவில்லை. ஒருவருக்கு ரசீது வழங்க மூன்று நாள் ஆகிறது. வரி வசூலில் தேக்கநிலை நீடிப்பதால் மாவட்ட நிர்வாகம் அடிக்கடி கேள்வி எழுப்புகிறது.இப்பிரச்னையால், ஊராட்சிகளில் பிற நபரிடமிருந்து வீடு வாங்கும் நபர்கள் தன்னுடைய பெயருக்கு வீட்டை பெயர் மாற்றம் செய்ய முடிவதில்லை என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !