உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சுத்தப்படுத்தப்படும் வைகை ஆறு

சுத்தப்படுத்தப்படும் வைகை ஆறு

மதுரை: மதுரை யானைக்கல் தரைப்பாலம் பகுதியில் வளர்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகள் நீர்வளத்துறை அனுமதியுடன் ஸ்டார் பிரண்ட்ஸ் அமைப்பு மூலம் சுத்தப்படுத்தப்படுகிறது.நீர்வளத்துறை உதவி பொறியாளர் சேகரன் கூறியதாவது:இப்பகுதியில் கழிவுநீர் சேர்வதால் ஆகாயத்தாமரை செடிகள் வளர்கின்றன. ஆரப்பாளையம் தடுப்பணை பகுதியிலும் கழிவுநீர் சேர்வதால் அங்கும் வளர்ந்துள்ளன. வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விட்ட நிலையில் அங்கிருந்த செடிகள் அனைத்தும் அடித்து வரப்பட்டு யானைக்கல் தரைப்பாலம் பகுதியில் தேங்கி விட்டது.பாலத்தின் அடியில் சிறிய துவாரமே இருப்பதால் செடிகள் வெளியேற முடியவில்லை. கலெக்டர் சங்கீதாவிடம் தெரிவித்த போது ஸ்டார் பிரண்ட்ஸ் அமைப்பை பரிந்துரைத்தார். அவர்கள் மூலம் 10 நாட்களாக ஆகாயத்தாமரை செடிகள் அகற்றப்பட்டு வெளியேற்றப்படுகிறது. இன்னும் இருநாட்களில் பணிகள் முழுமையாக முடிந்துவிடும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை