உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / புறப்பட்டது வந்தே பாரத் ரயில்; மதுரை - பெங்களூரு சோதனை ஓட்டம்

புறப்பட்டது வந்தே பாரத் ரயில்; மதுரை - பெங்களூரு சோதனை ஓட்டம்

மதுரை : மதுரையிலிருந்து நேற்று (ஜூன் 17) அதிகாலை பெங்களூரு வரை வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.அதிகாலை 5:15 மணிக்கு மதுரையிலிருந்து புறப்பட்ட வந்தே பாரத் சோதனை ஓட்டம் ரயில் திண்டுக்கலுக்கு அதிகாலை 5:58 மணிக்கு சென்றடைந்தது. காலை 6:00 மணிக்கு அங்கிருந்து கிளம்பி 7:10 மணிக்கு திருச்சி, அங்கிருந்து 7:15மணிக்கு புறப்பட்டு 8:18 மணிக்கு கரூர் சென்றடைந்தது.அங்கிருந்து 8:20 மணிக்கு புறப்பட்டு 9:32 மணிக்கு சேலம் சென்றது. பின் 9:35 மணிக்கு கிளம்பி 11:25க்கு ஜோலார்பேட்டை வழியாக மதியம் 1:15 மணிக்கு பெங்களூரு எஸ்.எம்.வி.டி., சென்றடைந்தது.இச்சோதனை ஓட்டத்தில் ரயில்வே அதிகாரிகள், ஊழியர்கள், இயந்திர பொறியாளர்கள் பங்கேற்றனர். விரைவில் இயக்கப்பட உள்ள இந்த ரயில் திண்டுக்கல், கரூர், ஜோலார்பேட்டையில் நிற்காது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை