நோயாளியின் மூச்சுக்குழாயில் இருந்த கட்டி அகற்றம்; வேலம்மாள் மருத்துவமனை சாதனை
மதுரை; தென் தமிழகத்தில் முதன்முறையாக மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் மூத்த நுரையீரல் நிபுணர் டாக்டர் பிரேம் ஆனந்த் தலைமையில் நோயாளியின் மூச்சுக்குழாயில் இருந்த கட்டி 'ப்ரோன்கோஸ் கோபி' மூலம் அகற்றப்பட்டது.டாக்டர் பிரேம் ஆனந்த் கூறியதாவது: வேலம்மாள் மருத்துவமனையின் சுவாச மருத்துவப் பிரிவில் 50 வயது பெண் இருமல், சுவாசிப்பதில் சிரமம், இருமும் போது ரத்தம் வெளியேறிய நிலையில் அனுமதிக்கப்பட்டார். 'ப்ரோன்கோஸ்கோபி' பரிசோதனையில் மூச்சுக்குழாயில் கட்டி இருந்தது உறுதி செய்யப்பட்டது.அந்த கட்டி 'எலக்ட்ரோகாட்டரி ஸ்னாரிங்' செயல்முறை மூலம் 'பிளெக்ஸிபில் ப்ரோன்கோஸ்கோபி' முறைப்படி அகற்றப்பட்டது.உடனடியாக அவருக்கு மூச்சுக்குழாயில் ரத்தப்போக்கு நிற்பதற்குமயக்கவியல் நிபுணர் மணிகண்டன் உதவியோடு 'ஆர்கான் பிளாஸ்மா கோகுலேஷன்' சிகிச்சை அளிக்கப்பட்டது. மறுநாள் நோயாளி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மற்ற அறுவை சிகிச்சைக்கு மூச்சுக்குழாய் வழியாக மயக்க மருந்து கொடுக்கப்படும். மூச்சுக்குழாயில் செய்யப்படும் செயல்முறை சிக்கலானது. 'பிளெக்ஸிபில் ப்ரோன்கோஸ்கோபி' சிகிச்சையில் ஆக்சிஜன் மற்றும் மயக்க மருந்து மூலம் வரும் வாயுக்கள் இரண்டும் நிர்வகிக்கப்பட வேண்டும். மேலும் மூச்சுக்குழாய் கட்டியை அகற்ற குறுகிய இடமே இருக்கும். தென் தமிழகத்தில் முதல் முறையாக மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் இந்த சிகிச்சை செய்யப்பட்டது என்றார்.