மேலும் செய்திகள்
மருத்துவ முகாம்
53 minutes ago
நவீன கண் சொட்டு மருந்து ஆலை திறப்பு
54 minutes ago
நன்னெறி வகுப்பு முகாம்
56 minutes ago
பலத்த காற்றுக்கு சரிந்த மின்கோபுரம்
57 minutes ago
மதுரை மாணவி முதலிடம்
57 minutes ago
மதுரை: ''கூட்டணி வலிமையாக இருந்தால் வெற்றிபெற முடியும் என்பதை ராமன், சுக்ரீவன் நட்பு மூலம் உணர முடியும்,'' என, ஆன்மிக சொற்பொழிவாளர் திருச்சி கல்யாணராமன் பேசினார்.மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தக்காராக இருந்தபோது மறைந்த கருமுத்து தி.கண்ணன் நினைவாக தியாகராஜர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் கம்பராமாயண தொடர் சொற்பொழிவு நடக்கிறது.'சுக்ரீவன் நட்பு' தலைப்பில் கல்யாணராமன் பேசியதாவது: தர்மத்தை நிலைநாட்ட அவதரித்தவர் ராமன். அவர் வேறு, தர்மம் வேறு இல்லை. குழந்தைகளுக்கு தர்மத்தை சொல்லிக் கொடுத்து பெற்றோர் வளர்க்க வேண்டும். துன்பம் வந்தால் யார் அதை போக்குகின்றாரோ அவர் தான் கடவுள். சர்வ காலமும் என் இதயத்தில் இரு என்று கடவுளிடம் வேண்டிக்கொண்டே இருக்க வேண்டும். அந்த அளவு பக்தி தேவை.கடவுள் ஏதோ ரூபத்தில் நம்மிடம் வருவார். கூட்டணி பலமாக இருந்தால் எதிலும் வெற்றி பெற முடியும் என்பதை ராமன், சுக்ரீவன் நட்பு மூலம் உணர முடியும். அதனால்தான் சுக்ரீவன் வாலியை,''வெளியே வா,'' என சண்டைக்கு அழைத்தார். இவ்வாறு அவர் பேசினார்.இச்சொற்பொழிவு ஜூன் 16 வரை தினமும் மாலை 6:00 முதல் இரவு 8:00 மணிவரை நடக்கிறது. அனுஷத்தின் அனுகிரகம் நிறுவனர் நெல்லை பாலு ஏற்பாடுகளை செய்துள்ளார்.
53 minutes ago
54 minutes ago
56 minutes ago
57 minutes ago
57 minutes ago