மேலும் செய்திகள்
2 மாதம் தண்ணீர் வழங்க தீர்மானம்
25-Aug-2024
ஊருக்குள் வெள்ளம் புகுந்ததால் அவதி
11-Sep-2024
மேலுார், : மேலுார் ஒருபோக பாசன பகுதிக்கு விநாடிக்கு 440 கன அடிக்குப் பதிலாக 295 கனஅடி தண்ணீரே திறப்பதாக நீர்வளத்துறையினர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.மேலுார் ஒரு போக பானச பகுதிக்கு செப்.15 முதல் 45 நாட்களுக்கு முழுமையாகவும், பின்னர் 75 நாட்களுக்கு ஐந்து நாட்கள் திறந்தும், நிறுத்தியும் முறை வைத்து தண்ணீர் கொடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் ஒரு போக பாசன பரப்பு துவங்கும் புலிப்பட்டி மதகில் நீர்வளத்துறையினர் அந்த அளவைவிட குறைந்த அளவிலேயே தண்ணீர் திறக்கின்றனர்.அதனால் ஒரு போக பாசன விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் நிலை உள்ளது. முந்தைய காலத்தில் மேலுார் ஒரு போக பாசனத்திற்கு 165 நாட்கள் முழுமையாக தண்ணீர் கொடுத்த நிலையில், தற்போது 45 நாட்கள் மட்டுமே முழுமையாக தண்ணீர் கொடுப்பதோடு, உரிய அளவையும் தர மறுக்கின்றனர் என்பது விவசாயிகளின் குற்றச்சாட்டு.விவசாய சங்க செயலாளர் ரவி கூறியதாவது : புலிப்பட்டி மதகில் விநாடிக்கு 440 கனஅடி தண்ணீர் திறப்பதற்கு பதிலாக 295 கன அடி திறக்கப்படுகிறது. இதனால் தண்ணீர் கடைமடை வரை சென்றடையவில்லை. 45 நாட்கள் மட்டுமே முழுமையாக திறக்கும் நிலையில், உரிய அளவு திறந்தால்தான் கண்மாயை நிரப்ப முடியும். விவசாய பணிகள் தீவிரமடைந்து வரும் நிலையில் நீர்வளத்துறையினர் தண்ணீர் அளவை குறைப்பதால் பற்றாக்குறை ஏற்படும். கம்பம் பள்ளத்தாக்கு பகுதிக்கு இரண்டு போகத்திற்கும் முழுமையாக தண்ணீர் கொடுக்கின்றனர்.இப் பகுதி நீர்அளவீட்டு கருவியை மாற்ற அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் மாற்றவில்லை.உரிய அளவு தண்ணீரை வழங்க வேண்டும் என்றார். நீர்வளத்துறை செயற்பொறியாளர் சிவபிரபாகர் கூறுகையில், உரிய அளவு தண்ணீர் தர ஏற்பாடு செய்யப்படும் என்றார்.
25-Aug-2024
11-Sep-2024