உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இறைச்சி கடைகள் முறைப்படுத்தப்படுமா

இறைச்சி கடைகள் முறைப்படுத்தப்படுமா

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம், திருநகர், ஹார்விபட்டி பகுதிகளில் ரோட்டோரங்களில் இறைச்சிக் கடைகள் அதிகரித்து வருகின்றன. எங்கு திரும்பினாலும் அவை இல்லாத இடங்களே இல்லை. மெயின் ரோடு பகுதி கடைகளின் முன்பு ரோட்டிலேயே வாடிக்கையாளர் வாகனத்தை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இறைச்சி கழிவுகளை ரோட்டில் வீசுவதால் அதை சாப்பிட நாய்கள் கடை முன் ‘காவல்’ காக்கின்றன. நாய்கள் மீது வாகனங்கள் மோதி விபத்து ஏற்படுகிறது. கழிவுகள் அருகிலேயே கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. மாநகராட்சியும், நெடுஞ்சாலைத்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை