உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மகளிர் காங்., கோரிக்கை ஊர்வலம்

மகளிர் காங்., கோரிக்கை ஊர்வலம்

உசிலம்பட்டி: உசிலம்பட்டியில் மகளிர் காங்., சார்பில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றவும், பெண்களுக்கு எதிரான வன்கொடுமையை தடுத்து நிறுத்தவும் வலியுறுத்தி ஊர்வலம் நடைபெற்றது. மாநிலத் தலைவி ஹசீனா சையத், மாவட்ட தலைவி பிரவீனா, நிர்வாகிகள் சுகன்யா, ஈஸ்வரி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். மதுரை ரோடு மலையாண்டித்தியேட்டர் முன்பிருந்து ஊர்வலமாக வந்து முத்துராமலிங்கத்தேவர், மூக்கையாத்தேவர் சிலைகளுக்கு மாலை அணிவித்து, பேரையூர் ரோடு டி.இ.எல்.சி., பள்ளி முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தி ஊர்வலத்தை நிறைவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ