உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரையில் மகளிர் தின விழா

மதுரையில் மகளிர் தின விழா

மதுரை: மதுரை மாநகராட்சி அனைத்து அலுவலர்கள் சங்க கூட்டமைப்பு மற்றும் மதுரை மாநகராட்சி ஆசிரியர் நலச்சங்கம் இணைந்து மகளிர் தினவிழாவை கொண்டாடினர். கூட்டமைப்பு தலைவர் முனியசாமி தலைமை வகித்தார். மேயர் இந்திராணி குத்து விளக்கேற்றி துவக்கி வைத்து ஆசிரியர், ஊழியர்களுக்கு பரிசு வழங்கினார். ரோஸ்லின் விக்டோரியா வரவேற்றார். கல்விக்குழுத் தலைவர் ராமச்சந்திரன், மண்டல தலைவர் சரவணபுவனேஸ்வரி, கவுன்சிலர் மகாலட்சுமி, நமச்சிவாயம், சிவராமகிருஷ்ணன், மணிகோபு, அன்புச்செல்வன் உட்பட பலர் பங்கேற்றனர்.* திருநகர் முத்து தேவர் முக்குலத்தோர் மேல்நிலைப் பள்ளியில் மகளிர் தின விழா தலைமை ஆசிரியர் ஆனந்த் தலைமையில் நடந்தது. பள்ளி தலைவர் சரவணன், செயலாளர் கண்ணன், இயக்குனர் நடன குருநாதன் முன்னிலை வகித்தனர். பெண் ஆசிரியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.* தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் மாநகராட்சி கிளை மூட்டா அரங்கில் உலக மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது. கிளைத் தலைவர் சித்ரா தலைமை வகித்தார். துணை தலைவர் வாணி வரவேற்றார். ஜெயசித்ரா, எமிமாள் ஞானசெல்வி, பாண்டி உமாதேவி, தனபாக்கியம் முன்னிலை வைத்தனர். வட்டாரச் செயலாளர் ஜோசப் ஜெயசீலன் சங்கத்தில் பெண்களின் பங்கு பற்றி பேசினார். நிர்வாகிகள் முருகேசன் சீனிவாசன் வாழ்த்தி பேசினர்.துணைமேயர் நாகராஜன், பெண்ணுரிமை மனித உரிமையே என்ற தலைப்பில் பேசினார். 102 பெண் ஆசிரியர்களுக்கு மகளிர் சாதனை விருது வழங்கினார். ஆசிரியைகள் ரேவதி, அரசுமணி, சுகந்தி, ரீட்டா ராணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். தலைமையாசிரியை சுவேகா நன்றி கூறினார்.* யானைமலை கிரீன் பவுண்டேஷன் சார்பில் மகளிர் தின விழா மாநகராட்சி பணியாளர் சந்திரா தலைமையில் நடந்தது. தலைமையாசிரியர் தென்னவன் முன்னிலை வகித்தார். ஸ்டெல்லா மேரி வரவேற்றார். உறுப்பினர் குணசுந்தரி பேசினார். நலினா மகளிர் சிறப்புகள் குறித்து பேசினார். ஆசிரியை அருணாச்சலத்தம்மாள், பவுண்டேஷன் ஆலோசகர்கள் பாண்டி, பாலமுருகன், உறுப்பினர்கள் பங்கேற்றனர். பெண் குழந்தைகளால் மரக்கன்றுகள் நட்டப்பட்டன. ஆலோசகர் பிரபு நன்றி கூறினார்.* மதுரை சமூக அறிவியல் கல்லுாரியில் மகளிர் ஆய்வு மையம் சார்பாக மகளிர் தினம் செயலாளர் தர்மசிங் தலைமையில் நடந்தது. முதல்வர் ஜெயக்குமார் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக மாநகராட்சி கமிஷனர் சித்ரா பங்கேற்றார். பேச்சுப்போட்டி, பட்டிமன்றம் நடந்தன. பேராசிரியர் ராஜலட்சுமி நன்றி கூறினார்.

திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மகளிர் தின விழா அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா தலைமையில் நடந்தது. பெண் பணியாளர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. மாநகராட்சி மேற்கு மண்டலம் திருப்பரங்குன்றம் அலுவலகத்தில் மண்டல தலைவர் சுவிதா தலைமையில் நடந்தது. உதவி கமிஷனர் பார்த்தசாரதி, நிர்வாக அலுவலர் ராதா, உதவி செயற்பொறியாளர் இந்திராதேவி, கவுன்சிலர்கள் விஜயா, சிவசக்தி, முத்துலட்சுமி, தமிழ்ச்செல்வி, சுவேதா, பணியாளர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை