மேலும் செய்திகள்
உரிமைத்தொகை மனு பெண்கள் குவிந்தனர்
20-Aug-2024
மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் குவிந்தது
21-Aug-2024
மகளிர் உரிமைத்தொகை பெற குவிந்த பெண்கள்
17-Aug-2024
பேரையூர் : மகளிர் உரிமைத்தொகை பெற விண்ணப்பித்த மகளிர் பலருக்கு உரிமைத்தொகை வருமா, வராதா, நிரகரிக்கப்பட்டதா, அப்படியெனில் என்ன காரணம் என தெரியாமல் அலைந்து வருகின்றனர்.தமிழக அரசு சார்பில் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக முகாம்கள் நடத்தப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. பேரையூர் தாலுகாவில் 69 ஆயிரத்து 800 ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். இவர்களில் விண்ணப்பித்த 30 சதவீதத்திற்கும் மேற்பட்டோருக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்கவில்லை. பெண்கள் கூறியதாவது: விண்ணப்பம் கொடுத்த சில நாட்களில் உங்களுடைய விண்ணப்பம் பெறப்பட்டது என எங்கள் அலைபேசிக்கு குறுஞ்செய்தி வந்தது. அதன் பிறகு எங்களது விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டதா, நிராகரிக்கப்பட்டதா பரிசீலனையில் உள்ளதா என்று தெரியவில்லை.தற்போது மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் மீண்டும் மனுக்கள் கொடுத்துள்ளோம். தாலுகா அலுவலகத்திற்கும் பெண்கள் நேரடியாக சென்று விண்ணப்பம் ஏற்கப்பட்டதா, நிராகரிக்கப்பட்டதா என்ன காரணத்திற்கு நிராகரிக்கப்பட்டது என்ற தகவலை தெரிந்து கொள்ள முடியவில்லை. அலுவலர்களிடம் கேட்டால் பெயர்களை குறித்துக் கொள்கிறோம். தகவல் தெரிந்தவுடன் உங்களுக்கு தெரிவிக்கிறோம் என்கின்றனர். பல நாட்களாக தாலுகா அலுவலகம் மட்டும் ஆர்.டி.ஓ., அலுவலகம் அலைந்து திரிகிறோம். தகுதியானவர்களுக்கு பணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
20-Aug-2024
21-Aug-2024
17-Aug-2024