மேலும் செய்திகள்
தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
13-Feb-2025
மதுரை: மதுரையில் சி.ஐ.டி.யு.,சார்பில் சுமைப்பணி தொழிலாளர்கள் எல்லீஸ் நகர் நலவாரிய அலுவலகம்முன்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டச் செயலாளர் பாண்டியன் தலைமை வகித்தார். அவர் பேசுகையில், ''புலம்பெயர் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை வழங்காதோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சர்வதேச தொழிலாளர் அமைப்பு உத்தரவுபடி 100 கிலோ மூடையை சுமப்பதை தடுக்க வேண்டும். கோடவுன்கள், லாரிகளில் இருந்து சரக்குகளை இறக்குவோருக்கு இ.எஸ்.ஐ., பி.எப்., போனஸ், அடையாள அட்டை வழங்க வேண்டும்'' என்றார். நகர் செயலாளர் அரவிந்தன், துணைத் தலைவர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
13-Feb-2025