உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பூஜ்ய ஆற்றல் குளிரூட்டும் அறை விவசாய மாணவிகள் செயல் விளக்கம்

பூஜ்ய ஆற்றல் குளிரூட்டும் அறை விவசாய மாணவிகள் செயல் விளக்கம்

மதுரை: திருமங்கலம் பி அம்மாபட்டி இயற்கை விவசாயி சுப்புராஜின் தோட்டத்தில் பழங்கள் அழுகாமல் சேமித்து வைக்கும் பூஜ்ய ஆற்றல் குளிரூட்டும் அறை அமைத்து காந்திகிராம கிராமிய பல்கலை வேளாண் மாணவிகள் மோனிகா, அமலயோஷ்னி, இந்துமதி, கீர்த்தனா, பிரேமலதா செயல்முறை விளக்கம் அளித்தனர். கிராம தங்கல் திட்டத்தின் கீழ் மதுரை திருமங்கலம் வந்த மாணவிகள் பழங்களை நீண்டநாள் அழுகாமல் இருப்பதற்கான தொழில்நுட்பத்தை விளக்கினர்.அவர்கள் கூறியதாவது: நிலத்தில் மேட்டுப்பகுதியை தேர்ந்தெடுத்து பழங்கள், காய்கறிகள் வைப்பதற்கான இடம் விட்டு அதைச் சுற்றி செங்கல் வைத்து இரட்டை சுவர் அமைக்க வேண்டும். சுவர்களுக்கு நடுவில் ஈரமணலை கொட்டி மேலே தென்னை மட்டையை நனைத்து மூடவேண்டும். தேவையான வெப்ப நிலை மற்றும் ஈரப்பதத்திற்காக தினமும் இரண்டு முறை செங்கல் அறையைச் சுற்றி தண்ணீர் தெளிக்க வேண்டும். காலியிடத்தில் பழங்கள் மற்றும் காய்கறிகளை துளையிடப்பட்ட பிளாஸ்டிக் பெட்டிகளில் வைத்து சேமிக்கலாம். மெல்லிய பாலிஎத்திலீன் தாளுடன் இந்த பெட்டிகளை மூடி வைத்தால் நீண்ட நாட்களுக்கு அழுகாமல் பாதுகாக்கலாம். 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய செங்கற்களால் அறை அமைக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ