உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / த.வெ.க., மாநில மாநாட்டில் 100 அடி கம்பம் சாய்ந்தது

த.வெ.க., மாநில மாநாட்டில் 100 அடி கம்பம் சாய்ந்தது

மதுரை:மதுரை பாரபத்தியில் த.வெ.க., இரண்டாவது மாநில மாநாடு இன்று மதியம் 3:00 மணி முதல், இரவு 7:00 மணி வரை நடக்கிறது. முதல் நிகழ்வாக, 100 அடி உயர கொடிக்கம்பத்தில் கட்சித் தலைவர் விஜய் கொடியேற்ற திட்டமிட்டிருந்த நிலையில், நேற்று மதியம் 3:00 மணிக்கு கொடிக்கம்பம் நிறுவும் போது, கம்பம் சரிந்தது. இதில், நுாறடி துாரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த த.வெ.க., நிர்வாகி ஒருவரின் காரின் மேற்பகுதி இரண்டாக பிளந்தது. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை. ஸ்ரீவில்லிபுத்துார்: தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு, 'பிளக்ஸ் போர்டு' வைத்தபோது மின்சாரம் பாய்ந்ததில், கல்லுாரி மாணவர் பலியானார். விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துார் இனாம் கரிசல் குளத்தைச் சேர்ந்த காளியப்பன் மகன் காளீஸ்வரன், 19; பி.எஸ்சி., விஸ்காம் மூன்றாம் ஆண்டு படித்தார். மதுரையில் இன்று நடக்கும் தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்காக, நேற்று முன்தினம் இரவு 9:50 மணிக்கு, காமராஜர் நகரில் பிளக்ஸ் வைக்க இரும்பு குழாயை எடுத்தார். அப்போது, டிரான்ஸ்பார்மரில் இருந்து செல்லும் மின் கம்பியில் பட்டு, மின்சாரம் பாய்ந்து விழுந்தார். ஸ்ரீவில்லிபுத்துார் அரசு மருத்துவமனையில் பரிசோதித்த டாக்டர்கள், காளீஸ்வரன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். வன்னியம்பட்டி போலீசார் விசாரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ