ஆஞ்சநேயருக்கு 1.08 லட்சம் வடைமாலை
மதுரை: திருச்சி மாவட்டம் கல்லுக்குழி ஆஞ்சநேய சுவாமி கோவிலில், டிச., 19ல் அனுமன் ஜெயந்தி விழா நடக்கிறது. அன்று அதிகாலை 5:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடக்கிறது. காலை 7:00 மணி முதல் சுவாமிக்கு, ஒரு லட்சத்து 8 வடைகள் கொண்ட மாலை சாத்தப்படுகிறது. ஏற்பாடுகளை செயல் அலுவலர் சரண்யா தலை மையில் நிர்வாகத்தினர் செய்கின்றனர்.