திருக்குறள் போட்டிக்கு தேர்வான அரசு ஊழியர், ஆசிரியர்கள்; மதுரையில் 12 பேர் தேர்வு
மதுரை : கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை அமைத்து 25 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, மாநில அளவில் திருக்குறள் வினாடி வினா போட்டிகளில் பங்கேற்பவர்களை தேர்வு செய்ய அனைத்து மாவட்டங்களிலும் முதல்நிலை எழுத்துத் தேர்வுகள் நடந்தன. இதில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர். இதில் தேர்வு பெறுவோர் டிச.28 ல் விருதுநகரில் நடைபெற உள்ள மாநில அளவிலான இறுதிப் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.மதுரையில் நடந்த மாவட்ட அளவிலான போட்டியில் தேர்வு பெற்றோர் விபரம்:தியாகராஜர் நன்முறை மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் கார்த்திக், சேக்கிபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் நவநீதகண்ணன், தெற்குத்தெரு அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் கருணாகரன், புனித பிரிட்டோ மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ஜெயராஜ், பாண்டியராஜபுரம் சர்க்கரை ஆலை அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் கணேஷ், வணிகவரித்துறை இளநிலை உதவியாளர் முத்துராம், வண்ணங்குளம் தொடக்கப்பள்ளி ஆசிரியர் பாண்டியராஜ்.நிலையூர் அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் மகாலட்சுமி, புலிப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் பாலமுருகன், மாவட்ட கருவூல அலுவலக கணக்காளர் கவுரி, மதுரை மேற்கு தாலுகா வருவாய் ஆய்வாளர் சுவாதிகா, செல்லம்பட்டி ஒன்றிய இளநிலை உதவியாளர் அழகுமாயன்.