மேலும் செய்திகள்
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
22-Nov-2024
மதுரை, : மதுரையில் வேனில் கொண்டு செல்லப்பட்ட பாலித்தீன் பை மூடைகளை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.கமிஷனர் தினேஷ்குமார் உத்தரவில், உதவி நகர்நல அலுவலர் அபிஷேக், சுகாதார அலுவலர் கோபால், ஆய்வாளர் அலாவுதீன் குழு யானைக்கல் பாலம் அருகே ஆய்வு செய்தது. அங்கு வந்த வேனில் சோதனையிட்டபோது தடை செய்யப்பட்ட பாலித்தீன் பை மூடைகள் 1.50 டன் அளவிற்கு இருந்தது தெரியவந்தது. வேனுடன் பாலித்தீன் முடைகளை பறிமுதல் செய்து அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.உதவிநகர்நல அலுவலர் அபிஷேக் கூறுகையில், பறிமுதல் செய்யப்பட்ட பாலித்தீன் பை மூடைகள் ஈரோட்டில் இருந்து மதுரை செல்லுாரில் உள்ள ஒரு லாரி ெஷட்டில் வைத்து, அங்கிருந்து வேன்களில் கடைகளுக்கு கொண்டுசெல்ல திட்டமிடப்பட்டிருந்தது. தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
22-Nov-2024