மேலும் செய்திகள்
நேற்று 14 பேருக்கு காய்ச்சல்
04-Jun-2025
மதுரை : மதுரையில் நேற்று 16 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். மொத்தம் 39 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர். டெங்கு, கொரோனா தொற்று பதிவாகவில்லை.மதுரை அரசு மருத்துவமனையில் நேற்று 15 குழந்தைகள் உட்பட 40 பேர் காய்ச்சலுக்கு புறநோயாளியாக சிகிச்சை பெற்றனர். தற்போது பல்வேறு வார்டுகளில் 25 பேர் காய்ச்சலுடன் உள் நோயாளியாக சிகிச்சை பெறுகின்றனர். திருப்பரங்குன்றத்தை சேர்ந்த 23 வயது பெண் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுகிறார். 3 நாட்களுக்கு முன் கொரோனா வார்டில் சேர்க்கப்பட்ட மதுரை இளம்பெண் டிஸ்சார்ஜ் ஆனார். சிறுநீரக பாதிப்பு உட்பட இணைநோய்களால் பாதிக்கப்பட்டுள்ள 50 வயது ஆண் சிகிச்சையில் உள்ளார்.
04-Jun-2025