மேலும் செய்திகள்
இன்றும், நாளையும் 80 சிறப்பு பஸ் இயக்கம்
25-Sep-2026
மதுரை: மதுரையில் பள்ளி மாணவர்களின் வசதிக்காக 17 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. சட்டசபையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜய்பார்த்திபன் அறிவித்தபடி மாணவர் வசதிக்காக பள்ளி நேரத்திற்கேற்ப காலை, மாலை நேரங்களில் சிறப்பு பஸ்களை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி மதுரை கோட்டத்தில் மதுரையில் 8, திண்டுக்கல்லில் 5, விருதுநகரில் 4 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. மதுரை மண்டலத்தில் திருமங்கலம் – டி.புதுார், கூடக்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளிகள், மாட்டுத்தாவணி – வடபழஞ்சி அரசு மேல்நிலைப்பள்ளி, பெரியார் பஸ் ஸ்டாண்ட் – ஒத்தக்கடை, முடுவார்பட்டி, சேந்தமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளிகள், திருப்பரங்குன்றம்– அனுப்பானடி சவுராஷ்டிரா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆரப்பாளையம் – தெப்பக்குளம் தியாகராஜர் மாடல் மேல்நிலைப்பள்ளிகளுக்கு பஸ்கள் சென்று வருகின்றன என்று போக்குவரத்து கழக மதுரை மண்டல நிர்வாக இயக்குனர் சரவணன் தெரிவித்தார். இதன்மூலம் மதுரை கோட்டத்தில் 17 பள்ளிகளின் 2295 மாணவர்கள் பயன்பெறுவர்.
25-Sep-2026