உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  போக்சோ வழக்கு 2 பேருக்கு தண்டனை

 போக்சோ வழக்கு 2 பேருக்கு தண்டனை

மதுரை: கிருஷ்ணகிரி மாவட்டம் சேலம் மெயின் ரோடு ஜெயக்குமார்35. இவர் மதுரையில் வசித்த ஒரு சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தார். அவருக்கு தேன்கனிக்கோட்டை அருகே கொப்பக்கரை நாகராஜ் 45 உதவினார். இருவர் மீதும் மதுரை கரிமேடு போலீசார் போக்சோ வழக்கு பதிந்தனர். மதுரை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. ஜெயக்குமாருக்கு ஆயுள் தண்டனை, ரூ.30 ஆயிரம் அபராதம், நாகராஜிற்கு10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூ.6 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி முத்துக்குமரவேல் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ