200 கிலோ பிளாஸ்டிக் பைகள் மேலுாரில் பறிமுதல்
மேலூர்: மேலுார் நகராட்சிக்கு உட்பட்ட கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதாக கமிஷனர் பாரத்துக்கு புகார் வந்தது. அதன்படி நகராட்சி எஸ்.ஐ., தினேஷ் குமார் , மேற்பார்வையாளர் பாலு மற்றும் ஊழியர்கள் ஆய்வு செய்தனர் . அதில் 200 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ. 18 ஆயிரம் அபராதம் விதித்தனர். ஆய்வு தொடரும் என தெரிவித்தனர்.