22 பவுன் திருட்டு
மேலுார் : மேலுார் அண்ணா காலனி மும்தாஜ் 56, கோட்டநத்தாம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார். நேற்று மும்தாஜ் மதுரை சென்று மாலை வீடு திரும்பினார். வீட்டின் முன்பக்க கிரில், மரக்கதவு உடைக்கப்பட்டு படுக்கை அறையில் மரபீரோவில் வைக்கப்பட்டிருந்த 22 பவுன், வெள்ளிப்பொருட்கள் திருடு போயிருந்தன. அவர் மேலுார் போலீசில் புகார் அளித்தார். டி.எஸ்.பி., சிவக்குமார், இன்ஸ்பெக்டர் சிவசக்தி, போலீசார் தினேஷ்குமார் இத்திருட்டில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.