குரூப் 1 தேர்வு 25 சதவீதம் பேர் ஆப்சன்ட்
மதுரை: மதுரையில் நேற்று நடந்த குரூப் 1 முதல் நிலைத் தேர்வில் 25 சதவீதம் பேர் 'ஆப்சன்ட்' ஆகினர்.டி.என்.பி.எஸ்.சி., சார்பில் துணை கலெக்டர், டி.எஸ்.பி., உள்ளிட்ட 6 பதவிகளில் உள்ள 70 இடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பு ஏப். 1ல் வெளியானது. அதற்கான முதல் நிலைத் தேர்வு தமிழகம் முழுதும் நேற்று நடந்தது.மதுரையில் 52 ஹால்களில் ஒதுக்கீடு செய்யப்பட்ட 14 ஆயிரத்து 480 தேர்வர்களில், 10 ஆயிரத்து 846 பேர் தேர்வெழுதினர். 3 ஆயிரத்து 634 பேர் எழுதவில்லை. திருமங்கலத்தில் 3 ஹால்களில் ஒதுக்கீடு செய்யப்பட்ட 720 தேர்வர்களில், 577 பேர் தேர்வெழுதினர். 143 பேர் எழுதவில்லை.