உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நான்கு வழிச்சாலையில் 3 மேம்பாலங்கள்

நான்கு வழிச்சாலையில் 3 மேம்பாலங்கள்

மதுரை: மதுரை அருகே நான்கு வழிச்சாலையில் ரூ.98 கோடி மதிப்பில் 3 புதிய மேம்பாலங்கள் அமைக்கப்பட உள்ளன.காஷ்மீர் - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை மதுரை வழியாக செல்கிறது. இந்த ரோட்டில் பல இடங்களில் கிராமச் சாலைகள் சந்திக்கும் இடங்களில் மேம்பாலங்கள் தேவைப்படுகிறது. இதில் மதுரை அருகே தனக்கன்குளம் பகுதி, திருமங்கலம் அருகே சிவரக்கோட்டை, அதையடுத்துள்ள கள்ளிக்குடியில் மேம்பாலம் அமைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (நகாய்) ஏற்பாடு செய்துள்ளது.சந்திப்பு பகுதிகளில் 3 ஆண்டுகளில் 5 பேருக்கு மேல் இறந்தால் அப்பகுதியை 'பிளாக் ஸ்பாட்' என்று வகைப்படுத்துகின்றனர். அந்த இடங்களில் மேம்பாலம் அமைக்க நகாய் ஏற்பாடு செய்யும். அந்த வகையில் மேற்கண்ட இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் தனக்கன்குளம் பகுதியில் ரூ.43 கோடியிலும், சிவரக்கோட்டையில் ரூ.26 கோடி, கள்ளிக்குடியில் ரூ.29 கோடி மதிப்பீட்டிலும் பாலங்கள் அமைய உள்ளன. தனக்கன்குளம் பகுதியில் அதிக போக்குவரத்து உள்ளதால் 6 வழிச்சாலையாகவும், மற்ற இடங்களில் 4 வழிச்சாலையாகவும் அமையும். தனக்கன்குளம் பகுதியில் இதற்காக நிலம் கையகப்படுத்த வேண்டியுள்ளது. இப்பணிகளை முடிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !