உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / 31 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் மதுரையில் இருவர் கைது

31 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் மதுரையில் இருவர் கைது

அலங்காநல்லுார் : மதுரை மாவட்டம் சமயநல்லுார் அருகே காட்டுப்பன்றிகளை வேட்டையாட 31 நாட்டு வெடிகுண்டுகள் வைத்திருந்த இருவரை சிறப்பு வன பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.மதுரை தபால் தந்தி நகர் ஜோயல் என்பவரது தோட்டத்தில் அழுகிய நிலையில் விலங்கு ஒன்று இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து வன உதவி பாதுகாவலர் சீனிவாசன் தலைமையில் வனச்சரகர் குமரேசன், வனவர் பூபதி ராஜன் ஆகியோர் மாறுவேடத்தில் அதலை கிராமத்தில் கண்காணித்து வந்தனர்.அங்குள்ள தோட்டத்தில் இரவில் சுற்றித்திரிந்த திண்டுக்கல் மாவட்டம் லிங்கவாடி மணி 70, ராமையாவை 43, கைது செய்தனர். அவர்களிடம் இருந்து காட்டுப் பன்றிகளை வேட்டையாட வைத்திருந்த 31 நாட்டு வெடிகுண்டுகள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள், டூவீலர் பறிமுதல் செய்யப்பட்டன. இறந்த விலங்கு எந்த வகையை சேர்ந்தது என ஆய்வுக்கு அனுப்பப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி