மேலும் செய்திகள்
புகையிலை பொருள் விற்ற 2 கடைகளுக்கு அபராதம்
04-Sep-2024
திருமங்கலம் : திருமங்கலம் கீழஉரப்பனுாரைச் சேர்ந்த பிரவீன் 32, மனைவி வைத்தீஸ்வரி 28. பலசரக்கு கடை வைத்துள்ளனர்.இவர்கள் கடையில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலை அடுத்து திருமங்கலம் போலீசார் சோதனைக்காக சென்றனர். அப்போது மினி வேனில் இருந்து பிரவீன் குட்கா, புகையிலை பொருள்கள் இறக்கிக் கொண்டிருந்தார். போலீசை பார்த்தவுடன் தப்பி ஓடினார். வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் 341 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். கடையில் இருந்த வைத்தீஸ்வரியை கைது செய்தனர். பிரவீனை தேடுகின்றனர்.
04-Sep-2024