உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சுருளியாறு மின் நிலையத்தில் 35 மெகாவாட் மின் உற்பத்தி

சுருளியாறு மின் நிலையத்தில் 35 மெகாவாட் மின் உற்பத்தி

கம்பம் : தேனி மாவட்டம், சுருளியாறு நீர் மின் நிலையத்தில் 35 மெகாவாட் மின் உற்பத்தி தொடர்ந்து நடைபெறுகிறது.முல்லைப் பெரியாறு அணை நீரை பயன்படுத்தி லோயர்கேம்ப்பில் 4 ஜெனரேட்டர்கள் மூலம் 168 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெறுகிறது. இரவங்கலாறு அணை நீரை பயன்படுத்தி சுருளியாறு மின் நிலையத்தில் ஒரு ஜெனரேட்டர் மூலம் 35 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.கோடையில் அணைகளில் தேவையான தண்ணீர் இருப்பு இருக்காது என்பதால் நீர் மின்நிலையங்கள் இயங்காது. ஆனால் சுருளியாறு மின் நிலையம் கோடையிலும் தேவைக்கு ஏற்ப மின் உற்பத்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டது. முழு அளவில் 20 முதல் 35 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. மின் உற்பத்தியால் இரவங்கலாறு அணையில் நீர்மட்டம் குறைந்து வருகிறது. இருப்பினும் மின் உற்பத்தி தொடர்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை