உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / யு.பி.எஸ்.சி., தேர்வில் 41 சதவீதம் ஆப்சென்ட்

யு.பி.எஸ்.சி., தேர்வில் 41 சதவீதம் ஆப்சென்ட்

மதுரை: மதுரையில் நடந்த யு.பி.எஸ்.சி., தேர்வில் 41 சதவீதம் பேர் 'ஆப்சென்ட்' ஆகினர்.ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான இந்திய குடிமைப் பணித் தேர்வு (யு.பி.எஸ்.சி.,) முதல்நிலை, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என 3 கட்டங்களாக நடத்தப்படும்.இந்த ஆண்டுக்கான முதல்நிலை தேர்வு நாடு முழுவதும் நேற்று நடந்தது. மதுரையில் அரசு மீனாட்சி மகளிர் கல்லுாரி, தமிழ்நாடு பாலிடெக்னிக், மதுரை கல்லுாரி உட்பட 6 ஆயிரத்து 106 பேர் பங்கேற்கும் வகையில் 16 தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டன. காலை 9:30 முதல் காலை 11:30 மணி வரையும், பிற்பகல் 2:30 முதல் மாலை 4:30 மணி வரையும் தேர்வு நடந்தன. காலை அமர்வில் 3 ஆயிரத்து 624 பேர், மதிய அமர்வில் 3 ஆயிரத்து 617 பேர் தேர்வு எழுதினர். இது 59 சதவீதம் ஆகும். மொத்தம் 41 சதவீதம் (2 ஆயிரத்து 489 பேர்) ஆப்சென்ட் ஆகி இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ