உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / 4.32 லட்சம் பேருக்கு தொற்றா நோய் சிகிச்சை

4.32 லட்சம் பேருக்கு தொற்றா நோய் சிகிச்சை

மதுரை : மதுரை மாநகராட்சியில் மக்களை தேடி மருத்துவத்தின் நவீனப்படுத்தப்பட்ட திரையிடல் விரிவாக்க திட்டம் சார்பில் பெண் சுகாதார பணியாளர்கள், செவிலியர்கள் 202 பேருக்கு தொற்றா நோய் கண்டறியும் மருத்துவ உபகரணங்களை மேயர் இந்திராணி பொன்வசந்த், கமிஷனர் தினேஷ்குமார் வழங்கினர்.மதுரை உலகத் தமிழ்ச்சங்கத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து மேயர் பேசுகையில், மாநகராட்சியில் 31 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களின் 156 பெண் சுகாதார தன்னார்வலர்கள், 45 நகர்ப்புற துணை நிலைய செவிலியர்கள் மூலம் தொற்றா நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. 12.53 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.இதில் 4.32 லட்சம் பேருக்கு தொற்றா நோய் கண்டறியப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்றார்.வாப் டிரஸ்ட் நிர்வாக இயக்குநர் சதீஷ் தேவதாஸ் வரவேற்றார். நகர்நல உதவி அலுவலர் அபிஷேக் திட்டம் குறித்து விளக்கினார்.துணைமேயர் நாகராஜன், எச்.சி.எல்., பவுண்டேஷன் துணை மேலாளர் பிரபாகர் இக்னேஷியல், பி.ஆர்.ஓ., மகேஸ்வரன், மண்டல மருத்துவ அலுவலர் ஸ்ரீகோதை, மண்டல தலைவர் சரவண புவனேஸ்வரி பங்கேற்றனர். டாக்டர் ஷர்மிளா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !