உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மின்சாரம் தாக்கி 5 பசுக்கள் பலி

மின்சாரம் தாக்கி 5 பசுக்கள் பலி

சோழவந்தான்: ஆலங்கொட்டாரத்தில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் 5 நிறைமாத சினைப்பசுக்கள் இறந்தன. இப்பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் 40, தனது மாடுகளை அப்பகுதி வயலில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். அங்கு வந்த காட்டுப்பன்றிகள் விரட்டியதில் மாடுகள் தெறித்து ஓடின. அப்போது ஒரு தனியார் வாழைத் தோப்பில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில் 5 நிறைமாத சினைப்பசுக்களும் சம்பவ இடத்திலேயே பலியாயின. அரசு நடவடிக்கை எடுத்து நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ