61 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்
மதுரை: தென்மாவட்டங்களில் நிர்வாக காரணங்கள், விருப்பத்தின் அடிப்படையில் 21 பெண்கள் உட்பட 61 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றப்பட்டுள்ளனர். இதில் மதுரை நகரில் இருந்து 8 பேரும், புறநகரில் இருந்து 5 பேரும் மாற்றப்பட்டுள்ளனர். இவர்கள் ராமநாதபுரம், நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களுக்கும், வெளிமாவட்டங்களில் இருந்து மதுரை நகருக்கும், புறநகருக்கும் இடமாற்றி தென்மண்டல ஐ.ஜி., விஜயேந்திர பிதாரி உத்தரவிட்டுள்ளார். இவர்கள் தீபாவளிக்கு பிறகு பொறுப்பேற்க உள்ளனர்.