உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஒன்பதாவது ஜல்லிக்கட்டில் பறந்தது 766; பாய்ந்தது 400

ஒன்பதாவது ஜல்லிக்கட்டில் பறந்தது 766; பாய்ந்தது 400

அலங்காநல்லுார் : அலங்காநல்லுார் கீழக்கரை ஏறுதழுவுதல் அரங்கத்தில் குலமங்கலம் வக்கீல் திருப்பதி ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் 'சால்னா காளை நினைவாக' ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. உயர்நீதிமன்ற நீதிபதி வடமலையான், அமைச்சர் மூர்த்தி, எம்.எல்.ஏ., வெங்கடேசன், ஆர்.டி.ஓ., ஷாலினி துவக்கி வைத்தனர்.இப்போட்டியில் 766 காளைகள், 400 வீரர்கள் களம் கண்டனர். வெற்றிபெற்ற காளை, வீரர்களுக்கு சைக்கிள், டிரசிங் டேபிள், மெத்தை பரிசாக வழங்கப்பட்டது. தலா 8 சுற்றுகளில் தேர்வான சிறந்த காளைகள், வீரர்களுக்கு பிரிட்ஜ் வழங்கப்பட்டது. முதல் 3 இடம் பிடித்த புதுக்கோட்டை மாவட்டம் ராப்பூசல் முனியாண்டி, தஞ்சை ஓலையூர் பாலா, தென்னலுார் காளைகளுக்கு முறையே கார், புல்லட், டூவீலர், முதல் 3 இடங்களில் 14, 13,9 காளைகள் பிடித்த பூவந்தி அபிசித்தர், விளாங்குடி சிவா, பொந்துகம்பட்டி அஜித் ஆகியோருக்கு 5, இரண்டரை, ஒரு பவுன் நகை பரிசு வழங்கப்பட்டது.போட்டியில் காயமடைந்த 42ல் 3 பேர் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். 5வது சுற்றுக்கு வீரர்கள் இல்லாததால் போட்டி 20 நிமிடம் நிறுத்தப்பட்டது. ஆதாருடன் பதிவு செய்யும் இடத்தில் குவிந்த வீரர்களால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசார் லேசான தடியடி நடத்தி விரட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை