உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பாழடைந்து வரும் கிராமச் சாவடி

பாழடைந்து வரும் கிராமச் சாவடி

சோழவந்தான்: விக்கிரமங்கலம் ஊராட்சி கீழப்பெருமாள்பட்டியில் கிராமச் சாவடி பராமரிப்பின்றி பாழடைந்து வருவதாக அப்பகுதியினர் வேதனை தெரிவித்தனர். அப்பகுதியைச் சேர்ந்த நவீனா கூறியதாவது:இங்குள்ள மந்தையில் கிராமச் சாவடி அமைந்துள்ளது. இச்சாவடி கட்டப்பட்டு பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி உள்ளது. கட்டடத்தில் ஆங்காங்கே சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்துள்ளன. தரைப்பகுதி பல இடங்களில் சேதமடைந்துள்ளது. சாவடியில் இருந்த மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இங்கு கிராம கூட்டம், பொது, அரசு நிகழ்ச்சிகள் நடக்கும். கிராம பெரியோர்கள் ஓய்வு நேரம் இங்கு வந்து இளைப்பாறுவர். மின்இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் மின்விசிறி, விளக்கு இல்லாமல் சிரமப்படுகின்றனர். ஒன்றிய அதிகாரிகள் கிராம சாவடியை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை