எங்கிருந்து பார்த்தாலும் தெரிந்த தீபம்
திருப்பரங்குன்றம் மலை தீபத்துாணில் தீபம் ஏற்றியதை மலை அடிவாரத்திலிருந்து, சுப்பிரமணியசுவாமி கோயில் முன்பிருந்து பக்தர்கள் தரிசித்தனர். ரயில்வே மேம்பாலத்தில் நின்று பார்த்தால் மிக தெளிவாக தெரிந்தது. பக்தர்கள் வாகனங்களை நிறுத்தி அலைபேசியில் செல்பி எடுத்தனர். கண்களுக்கு எட்டும் துாரம் அதாவது மலையை சுற்றிலும் உள்ள 53 கிராமங்களில் வசிப்பவர்களுக்கு தீபத்தின் சுடரொளி பிரகாசமாக தெரிந்தது. மக்கள் துாரத்திலிருந்தும் தரிசித்தனர்.