உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / குடிநீர் தொட்டியில் செயல்படும் நுாலகம்

குடிநீர் தொட்டியில் செயல்படும் நுாலகம்

சோழவந்தான்: வாடிப்பட்டி ஒன்றியம் முள்ளிப்பள்ளத்தில் கைவிடப்பட்ட குடிநீர் தொட்டியில் செயல்படும் ஊர்புற நுாலகத்தில் போதிய இடவசதி, பாதுகாப்பு இல்லை.இங்குள்ள பழமையான தொட்டியில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நுாலகம் செயல்பட்டு வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன் பழுதடைந்த தொட்டி அருகே புதிய மேல்நிலை தொட்டி கட்டப்பட்டது. அந்த பழைய தொட்டியின் கீழ் குறுகலான இடத்தில் புத்தகங்கள் வைக்க போதிய இடமில்லை. கைவிடப்பட்ட தொட்டியின் பூச்சுக்கள் பெயர்ந்து விழுகின்றன. மின்சாரம், கழிப்பறை வசதிகள் இல்லை.இதனால் போதிய வெளிச்சமின்றி வாசகர்கள் வெளியே மரத்தடியில் அமர்ந்து வாசிக்கின்றனர். இந்த நுாலகத்திற்கு தனி கட்டடம் வேண்டும் என கிராமமக்கள் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி