உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / காந்தி பற்றி அவதுாறு செய்தவர் காந்தி மியூசியத்தில் உதவ உத்தரவு

காந்தி பற்றி அவதுாறு செய்தவர் காந்தி மியூசியத்தில் உதவ உத்தரவு

மதுரை, : மகாத்மா காந்தி மீது அவதுாறு பரப்பும் வகையில் பேஸ்புக்கில் படத்துடன் கருத்து வெளியிட்டதாக கல்யாணசுந்தரம் என்பவர் மீது மதுரை சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அவர் மதுரை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமின் மனு தாக்கல் செய்தார்.நீதிபதி சிவகடாட்சம்: மனுதாரர் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் 15 நாட்களில் சரணடைய வேண்டும். சைபர் கிரைம் போலீசில் 30 நாட்களுக்கு தினமும் காலை 9:00 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும். மதுரை காந்தி மியூசிய நுாலகத்தில், புத்தகங்களை அடுக்கி வைக்க நுாலகருக்கு 15 நாட்கள் உதவி செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி