உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்ற புதிய தாமிர கொப்பரை

 குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்ற புதிய தாமிர கொப்பரை

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மலை மேல் கார்த்திகை மஹா தீபம் ஏற்ற சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு புதிய தாமிர கொப்பரையை அறங்காவலர் குழுத்தலைவர் சத்யபிரியா, மதுரை தி.மு.க., வடக்கு மாவட்ட தலைமை செயற்குழு உறுப்பினர் பாலாஜி உபயமாக வழங்கினர். இத்திருவிழாவை முன்னிட்டு கோயில் சார்பில் ஆண்டுதோறும் மலை மேல் உச்சிப் பிள்ளையார் கோயில் மண்டபம் அருகிலுள்ள மண்டபத்தின் மேல் மூன்றரை அடி உயரம், இரண்டரை அடி அகலம் கொண்ட தாமிர தீப கொப்பரை வைத்து அதில் 300 லிட்டர் நெய், 150 மீட்டர் காடா துணியில் திரி தயாரித்து, 5 கிலோ சூடம் மூலம் தீபம் ஏற்றப்படும். இக்கொப்பரை 1993 முதல் பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்தாண்டு டிச. 3ல் மலை மேல் மஹா தீபம் ஏற்ற புதிய தாமிர கொப்பரை பயன்படுத்தப்பட உள்ளது. 4 அடி உயரம், மேல்பகுதி இரண்டரை அடி அகலம், அடிப்பகுதி ஒன்னேமுக்கால் அடி அகலம், 70 கிலோ எடையில், 400 லிட்டர் நெய் கொள்ளளவு கொண்ட புதிய தாமிர தீப கொப்பரை திருவண்ணாமலையில் தயாரிக்கப்பட்டது. அந்த கொப்பரை நேற்று கோயிலுக்கு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்