மேலும் செய்திகள்
மருத்துவ முகாம்
51 minutes ago
நவீன கண் சொட்டு மருந்து ஆலை திறப்பு
52 minutes ago
நன்னெறி வகுப்பு முகாம்
54 minutes ago
பலத்த காற்றுக்கு சரிந்த மின்கோபுரம்
55 minutes ago
மதுரை மாணவி முதலிடம்
55 minutes ago
மதுரை: மதுரையின் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க வைகை கரையோர ரோடுகள் பேருதவியாக உள்ளன. இந்த ரோடுகள் 75 சதவீதம் அமைக்கப்பட்டு விட்டாலும் சில இடங்களில் அமைக்கப்படாமல் உள்ளன. குருவிக்காரன் சாலை முதல் அண்ணாநகர் வரை 800 மீ., தொலைவுக்கும், ராஜாமில் முதல் புட்டுத்தோப்பு வரை 400 மீ., தொலைவுக்கும் அமைக்கப்படாமல் உள்ளது.வடபகுதி கரையோரம் திண்டுக்கல் ரோடு பாலம் முதல் பரவை வரை 8 கி.மீ., தொலைவுக்கு பதிய ரோடு விரைவில் அமைய உள்ளது. இதேபோல தென்பகுதி கரையோரமும் புதிதாக அமைக்க வேண்டிய அவசியம் உள்ளது.தற்போது தேனி ரோட்டில் கடும் போக்குவரத்து நெரிசல் உள்ளது. கோச்சடையில் மாநகராட்சி லாரி ெஷட் உள்ளதால் காளவாசல் முதல் அச்சம்பத்து, கோச்சடை பகுதிகளுக்கு ஏராளமான லாரிகள் செல்கின்றன. தேனி ரோட்டில் மேம்பாலப் பணிகள் நடப்பதால் நெரிசல் அதிகமாக உள்ளது. பாலம் அமைந்தாலும் கோச்சடை ரோட்டில் அதிகளவில் போக்குவரத்து உள்ளது. எனவே இதனை தவிர்க்க வைகையின் தென்பகுதி கரையோரம் துவரிமான் வரை 6 கி.மீ., தொலைவுக்கு ரோடு அமைத்தால் நெரிசலை பெருமளவு தவிர்க்கலாம். மேம்பாலம் இடம் மாறுமா
மதுரை - மேலுார் ரோட்டில் கே.கே.நகர் சந்திப்பு முதல் மாட்டுத்தாவணி பஸ்ஸ்டாண்டை தாண்டி நெடுஞ்சாலைத் துறை சார்பில் 1.5 கி.மீ.,க்கு மேம்பாலம் அமைக்க ஏற்கனவே கருத்து அனுப்பப்பட்டுள்ளது. இந்த ரோட்டில் ஏற்கனவே காய்கறி, பழ மார்க்கெட், வேளாண் விற்பனை வாரியம் உள்ளன. அதையடுத்து பஸ்ஸ்டாண்ட், சுற்றுவட்டாரங்களில் ஏராளமான ஓட்டல்கள், கடைகள், மால்கள் செயல்படுகின்றன. விரைவில் பஸ்ஸ்டாண்டையொட்டிய பகுதியில் டைடல் பார்க் அமைக்கவும் அரசு முடிவெடுத்துள்ளது.எல்லாவற்றுக்கும் மேலாக கோரிப்பாளையம் வழியாக மதுரையின் வடபகுதிக்கு வரும் மெட்ரோ ரயில் புதுார், மூன்றுமாவடி சென்று மீண்டும் மாட்டுத்தாவணி பகுதிக்கு வந்து ஒத்தக்கடைக்கு செல்லும் வகையில் ஆய்வுகள் நடந்து வருகின்றன. எனவே இப்பகுதியில் அமைக்க முடிவு செய்துள்ள பாலத்தை பஸ்ஸ்டாண்டுக்கு பின்புறம், வண்டியூர் கண்மாயின் வடபகுதிக்கு மாற்றி அமைக்கலாம்.ஏற்கனவே மார்க்கெட் அருகே உள்ள துணை மின் நிலையம் பகுதியில் இருந்து கிழக்கு நோக்கி ரிங்ரோடு வரை லாரிகள் போக்குவரத்திற்காக புதிதாக ரோடு அமைக்கும் கருத்துரு உள்ளது. இந்த ரோட்டுக்கு பதில் மேம்பாலத்தை அமைத்தால் நீராதாரம் பாதிக்காமல் புதிய ரோடு இணைப்பு கிடைக்கும். மாட்டுத்தாவணி ரோட்டிலும் நெரிசல் பெருமளவு குறையும். நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இதற்கு வழிகாண வேண்டும்.
51 minutes ago
52 minutes ago
54 minutes ago
55 minutes ago
55 minutes ago