உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அன்று கொள்ளைக்காரன்... இன்று ஆட்டோக்காரன்... பயணியாக நடித்து 21 ஆண்டுகளுக்கு பின் கைது செய்த போலீசார்

அன்று கொள்ளைக்காரன்... இன்று ஆட்டோக்காரன்... பயணியாக நடித்து 21 ஆண்டுகளுக்கு பின் கைது செய்த போலீசார்

மதுரை: மதுரையில் கொள்ளையில் ஈடுபட்டு வெளிநாடு தப்பிச்சென்று மீண்டும் வந்து ஆட்டோ ஓட்டி வந்தவரை 21 ஆண்டுகளுக்குப்பின் பயணி போல் ஸ்டேஷன் வரை போலீசார் பயணித்து கைது செய்தனர். மதுரை வில்லாபுரத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் 55. இவர் மீது கொள்ளை வழக்கு நிலுவையில் உள்ளது. வெளிநாட்டிற்கு சென்றுவிட்டார். பிடி வாரன்ட் பிறப்பித்தும் ஆஜராகவில்லை. உதவி கமிஷனர் சூரக்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் தேடும் பணியில் ஈடுபட்டனர். வில்லாபுரம் பகுதியில் ஆறுமுகம் ஆட்டோ ஓட்டி வருவது தெரிந்தது. நேற்று அவரது ஆட்டோவில் போலீசார் தெப்பக்குளம் செல்ல வேண்டும் எனக்கூறி பயணி போல் சவாரி சென்றனர். ஸ்டேஷன் வந்ததும் அவரை கைது செய்தனர். போலீசார் கூறியதாவது: தெப்பக்குளம் ஸ்டேஷனிற்குட்பட்ட பகுதியில் 2004ல் ஒரு வீட்டில் கொள்ளை நடந்தது. இதுதொடர்பாக ஆறுமுகம் உட்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆறுமுகம் வெளிநாடு தப்பிச்சென்றதால் அவரை கைது செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. நீதிமன்ற விசாரணைக்கும் ஆஜராகவில்லை. பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. தொடர்ந்து வெளிநாட்டிலேயே இருப்பதாக நாங்கள் கருதிய நிலையில், வில்லாபுரத்தில் ஆட்டோ ஓட்டி வருவது தெரியவந்தது. தனிப்படை எஸ்.எஸ்.ஐ.,க்கள் சந்தானபாண்டியன், முருகன் ஆகியோர், தெப்பக்குளம் வரை செல்ல வேண்டும் எனக்கூறி அவரது ஆட்டோவில் பயணி போல் ஏறினர். அவர்கள் போலீஸ் எனத்தெரியாமலும், 21 ஆண்டுகளானதால் போலீசாருக்கு தன்னை அடையாளம் தெரியாது என்று கருதியும் சவாரி அழைத்து வந்த நிலையில் ஸ்டேஷன் வந்ததும் அவரை கைது செய்தோம். இவ்வாறு கூறினர். தனிப்படை போலீசாரை கமிஷனர் லோகநாதன், துணைகமிஷனர் இனிகோ திவ்யன், உதவிகமிஷனர் சூரக்குமார் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை