மேலும் செய்திகள்
Match ஒன்று Qualifiers மூன்று DCvsGT
19-May-2025
பேரையூர்: பேரையூர் தாலுகாவில் உள்ள பஸ் ஸ்டாப்புகளில் நிழற்குடைகளை ஊராட்சி அமைப்புகள் முறையாக பராமரிப்பது இல்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நிழற்குடைகளில் சிலர் ஒருமையில் எழுதுவது, சித்திரங்கள் வரைவது, அருவருப்பு கருத்துக்களை பதிவிடுவது என சமூக விரோத செயல்களும் அரங்கேறுகின்றன. விழா வைபவங்கள், அரசியல், இரங்கல் சம்பந்தமான ஏராளமான போஸ்டர்கள் ஒட்டப்படுகின்றன. போஸ்டர்கள் ஒன்றின் மீது ஒன்று ஒட்டப்படுவதால் அலங்கோலமாக குப்பை குவியலாக காட்சியளிக்கின்றன. பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் இத்தகைய போஸ்டர் கலாசாரத்தால் முகம் சுளிக்கின்றனர். போஸ்டர் கலாசாரத்திற்கு உள்ளாட்சி அமைப்புகள் தடை விதித்திருந்தும் நிர்வாக ரீதியாக நடவடிக்கை இல்லை. எனவே போஸ்டர் ஒட்டுவோர் மீது அபராதம் விதித்தால் நிழற்குடைகள் சுத்தமாக இருக்கும்.
19-May-2025