உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தி.மு.க., மீது அவதுாறு வலை

தி.மு.க., மீது அவதுாறு வலை

மதுரை; ''தமிழகத்தில் தி.மு.க., மீது அரசியல் கட்சிகளால் அவதுாறு வலை பின்னப்படுகிறது'' என தி.மு.க., தேர்தல் பணிக்குழு செயலாளர் கம்பம் செல்வேந்திரன் குற்றம்சாட்டினார். மதுரையில் நமது நிருபரிடம் அவர் கூறியதாவது:தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் உத்தரவுப்படி 2026 சட்டசபை தேர்தலுக்கான பணிகள் சட்டசபை தொகுதிகள் வாரியாக தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 200 தொகுதிகளில் வெற்றி என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.சென்னை அண்ணா பல்கலை மாணவி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட சம்பவம் கண்டிக்கத்தக்கதுதான். அவ்வழக்கு தொடர்பாக சில மணிநேரத்தில் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். அச்சம்பவம் தொடர்பாக சட்ட நடவடிக்கைகள் தொடர்கின்றன. ஆனால் சில அரசியல் கட்சிகள் யூகங்கள் அடிப்படையில் அவதுாறு கிளப்பி பழிபோட்டு வருகின்றன. தி.மு.க., மீது அரசியல் கட்சிகளால் அவதுாறு வலை பின்னப்படுகின்றது. அது முறியடிக்கப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ