உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஒன்றியத்தில் காவுவாங்க காத்திருக்குது கிணறு

ஒன்றியத்தில் காவுவாங்க காத்திருக்குது கிணறு

சோழவந்தான்: சோழவந்தான் அருகே திருவேடகத்தில் தற்காலிக ஒன்றிய அலுவலக வளாகத்தில் பாழடைந்த கிணறு மூடப்படாமல் உள்ளதால் விபரீதம் விளைய அதிக வாய்ப்புள்ளது.இந்த வளாகத்தில் சேவை மையம், சமுதாயக்கூடம் செயல்படுகின்றன. இங்கு முன்னர் குடிநீர் தேவைக்காக பயன்படுத்திய வட்டமான கிணறு பாழடைந்து கிடக்கிறது. வாடிப்பட்டியில் செயல்பட்டு வந்த ஒன்றிய அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்டப்படுவதால் திருவேடகம் ஊராட்சி அலுவலக வளாகம், தற்காலிக ஒன்றிய அலுவலகமாக செயல்படுகிறது. இதனால் அப்பகுதிக்கு ஏராளமானோர் வந்து செல்கின்றனர். கிணற்றில் 20 அடிக்கு இலைச் சருகுகள், குப்பை நிரம்பி மண் தரையாக உள்ளது. கிணற்றின் மேற்பகுதி மூடப்படாமல் உள்ளதால் யாரேனும் தவறி விழுந்து விபரீதம் விளைய் அதிக வாய்ப்பு உள்ளது. அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்தால் விபரீதம் நடக்காமல் தடுக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ