மேலும் செய்திகள்
உறுப்பினர் சேர்க்கை எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
05-Jul-2025
எழுமலை: எழுமலைஅருகே ராஜக்காபட்டி சமய கருப்பசாமி கோயில் ஆடித் திருவிழாவை முன்னிட்டு கிடா முட்டு போட்டி நடந்தது.மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், திருச்சி, சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் செவலை மறை, வெள்ளை கொங்கு, குட்டை கருமறை, குரும்பை உள்பட பல்வேறு வகையான 40 க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்றன. கால்நடை டாக்டர்கள் பரிசோதனைக்குப்பின் போட்டிகளில் களமிறங்கிய அவை நேருக்கு நேர் மோதின.வெற்றி பெற்ற கிடாக்களை, சமமாக மோதிய ஜோடிகள், 70 க்கும் அதிகமான முறை முட்டிக்கொண்ட ஜோடிகள் எனத் தேர்வு செய்து பரிசுகள் வழங்கினர். அய்யப்பன் எம்.எல்., தி.மு.க., செயற்குழு உறுப்பினர் இளமகிழன், ராஜக்காபட்டி முன்னாள் ஊராட்சித் தலைவர் சித்ரா உள்பட பலர் பங்கேற்று பரிசு வழங்கினர்.
05-Jul-2025