உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / 9766 உறுப்பினர்களுக்கு ஆவின் ஊக்கத்தொகை

9766 உறுப்பினர்களுக்கு ஆவின் ஊக்கத்தொகை

மதுரை: மதுரையில் ஆவின் பால் உற்பத்தியாளர்கள் 9766 பேருக்கு ரூ.5.63 கோடி ஊக்கத் தொகை வழங்கப்பட்டது. மதுரை ஆவின் லாபம் ஈட்டியதை முன்னிட்டு 632 பால் உற்பத்தியாளர் சங்கங்களுக்கு இந்தாண்டு லிட்டருக்கு தலா ரூ.1 வீதம் ஊக்கத் தொகை வழங்க அனுமதிக்கப்பட்டது. மாவட்டத்தில் 9766 உறுப்பினர்கள் தகுதி பெற்றனர். அவர்களுக்கு சென்னையில் பால் வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது. கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்பையன், கமிஷனர் ஜான் லுாயிஸ், மதுரை உதவி பொது மேலாளர் கார்த்திகேயன் பங்கேற்றனர். பொது மேலாளர் சிவகாமி கூறுகையில், அனைத்து உறுப்பினர்களுக்கும் ஊக்கத் தொகை உரிய முறையில் செலுத்தப்பட்டுள்ளது. மதுரை ஆவின் தினமும் 1.70 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்கிறது. இது 2 லட்சம் லிட்டராக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. உற்பத்தியாளர்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை