குழந்தைகளுக்கான அபாகஸ் பயிற்சி
மதுரை: மதுரை கலைஞர் நுாலகத்தில் குழந்தைகளுக்கான 'அபாகஸ்' (எண் சட்டம்) தொடர் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. எண்கணித கணக்கீடுகளை எளிதாக்க, கணிதத்தின் மீதுள்ள பயத்தைப் போக்கி ஆர்வத்தை உண்டாக்க, நினைவாற்றலுடன் கல்வித் திறனை மேம்படுத்த குழந்தைகளுக்கு இப்பயிற்சி வழங்கப்படுகிறது. ஆக., 9 முதல் சனிக்கிழமைதோறும் மாலை 5:30 மணிக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 6 முதல் 14 வயதுடையவர்கள் பயிற்சி பெறலாம். விருப்பமுள்ளவர்கள் tinyurl.com/Abacus-at-KCL ல் முன்பதிவு செய்ய வேண்டும்.